2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

நாளைய உலகம் குறும்படம் 15 இல் வெளியீடு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 13 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

வவுனியாவில் அண்மையில் தயாரிக்கப்பட்ட நாளைய உலகம் குறும்பட வெளியீடு எதிர்வரும் 15 ஆம் திகதி கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் வெளியீடாக காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட்டவுள்ளது.

வவுனியா பொன் வீடியோ மீடியா கலையகத்தால் தயாரிக்கப்பட்ட இக் குறும்படம் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் கலாநிதி அகளங்கன் தலைமையில் வெளியிடப்படவுள்ளது.

சி. சுபாஸ்சிங்கத்தால் கதை, அயக்கம், தயாரிப்பு மேற்கnhளள்ப்பட்டு வெளிவரும் இக் குறும்படத்தில் கபில், சிவநேசன், நாகராசா, சகீர், துஸ்யந் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா பிரதேச செயலாளர் கா. உதயராசாவும் சிறப்பு விருந்தினராக சிரேஸ்ட ஊடகவியலாளர் அருணா செல்லத்துரையும் கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசனும் கௌரவ விருந்தினர்களாக கலாசார உத்தியோகத்தர்களான இ. நித்தியானந்தன் மற்றும் வீ. பிரதீபன் ஆகியோர் கல்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை தமிழ் தாய் வாழ்த்தினை ஞா. வசந் பாடவுள்ளதுடன், வரவேற்புரையினை ந. கபிலநாத்தும் கருத்துப்பகிர்வினை பொ. மாணிக்கவாசகம், கே. வசந்தரூபன், எஸ். வரதகுமார், ஆறு. சுபாஸ்கரன். சி. கஜேந்திரன், றோ. கனிசியஸ், கே. ரூபகாந், க. கந்தவேள், மா. ஜெகன் ஆகியோர் வழங்கவுள்ளதுடன் ஏற்புரையினை சி. சுபாஸ்சிங்கமும் நன்றியுரையினை சி. நாகராசாவும் வழங்வுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X