2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

'வேடர்களின் இருப்பினை தக்கவைக்கும் வாய்மொழிப் பாடல்கள்' அளிக்கை செய்யப்படவுள்ளன

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 20 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.லோஹித்

பெப்ரவரி 21ஆம் திகதி கொண்டாடப்படும் உலக தாய்மொழிகளின் தினத்தை முன்னிட்டு 'வேடர்களின் இருப்பினை தக்கவைக்கும் வாய்மொழிப் பாடல்கள்' நுண்கலைத்துறையில் அளிக்கை செய்யப்படவுள்ளன.

நாளை வியாழக்கிழமை முற்பகல் 10 மணி முதல் 12 மணிவரை கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை முன்றலில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை நுண்கலைத்துறை மேற்கொண்டுள்ளதாக நுண்கலைத்துறைத் தலைவர் கலாநிதி சி.ஜெயசங்கர் தெரிவித்தார்.

பெப்ரவரி 21 உலக தாய்மொழிகள் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. வங்காள மொழியை அரசகரும மொழியாக ஆக்கக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது உயிர்நீத்த 4 மாணவர்களின் நினைவாக பெப்ரவரி 21 சர்வதேச அளவில் மொழி தொடர்பாக நினைவுகூரப்படும் தினமாக கொண்டாடப்படுகிறது.

வங்காளதேச அரசாங்கத்தின் முயற்சிகள், சர்வதேச அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகளின் யுனெஸ்கோ அமைப்பு பெப்ரவரி 21 ஐ, 1999ஆம் ஆண்டு சர்வதேச தாய்மொழிகள் தினமாக பிரகடனப்படுத்தியது. 2000ஆம் ஆண்டு முதல் இந்தத் தினம் உலகம் முழுவதும் தாய்மொழிகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்தத் தினத்தில் உலகில் உள்ள 6000 - 7000 வரையான மொழிகளுள் ஒன்றாக உள்ள தமிழ்மொழியினைப் பேசிவரும் நாம், தமிழ்மொழியை இன்றைய உலகமயமாக்க சவால்களுக்கு மத்தியில் எத்தகைய நோக்கில் முன்னெடுத்துச் செல்லப் போகின்றோம் என்பது உரையாடல்களுக்கும் செயற்பாடுகளுக்கும் உரிய விடயமாக அமைகின்றது

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--