2021 மார்ச் 01, திங்கட்கிழமை

ஐந்து நூல்கள் வெளியிட நடவடிக்கை

Kogilavani   / 2014 ஏப்ரல் 04 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செலயகப் பண்பாட்டு பிரிவு நடத்தும் ஐந்து நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் திங்கட்கிழமை (7) பிற்பகல் 2.40 மணிக்கு மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.

மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் த.உருத்திரா எழுதிய ஆண்கோணி, காத்தான்குடி ரஹீம் எழுதிய சிவப்பு இரவு, தங்கன் எழுதிய தூண்டில், திருமதி இந்திராணி புஸ்பராஜா எழுதிய குயில் குஞ்சுகள் ஆகிய நூல்களும், மட்டக்களப்பு மாவட்ட மாணவர்களின் சிறுகதை, கவிதை, நாடகம், ஓவியம் ஆகிய படைப்புகளை, மலர்ச்செல்வன் தொகுத்த சிறகுவிரி நூலும் வெளியிடப்படுகிறது.

இவற்றுக்கான விமர்சன உரைகளை கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் திருமதி ரூபி வலன்ரீனா பிரான்சிஸ் கவிஞர் வாசுதேவன், கவிதாயினி டாக்டர் மலரா, ஏழுத்தாயினி மண்டூர் அசோகா, கவிஞர் மேரா ஆகியோர் நிகழ்த்துகின்றனர்.

முதன்மை அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பிஎஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் டப்ளியூ.ஏ.எல்.விக்கிரமராட்சி, மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சத்தியநாதன், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி என். புள்ளைநாயகம், கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீகிருஸ்ணராஜா, மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அஹமட்லெப்வை ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .