2021 மே 15, சனிக்கிழமை

பேழை சஞ்சிகை வெளியீடு

Thipaan   / 2015 ஜனவரி 31 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு வின்சென்ற் மகளிர்  தேசியப்பாடசாலையின் பேழை சஞ்சிகை வெளியீடு பாடசாலை அதிபர் திருமதி ஆர்.கனகசிங்கம் தலைமையில் பாடசாலையின் குறொப்ற் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை(31) காலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா கலந்து கொண்டார்.

சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் ரி.யுவராஜன்,  விசேட அதிதிகளாக ஐ.ஓ.எம். நிறுவன திட்ட அதிகாரி திருமதி மயூரன் மேரி லம்பெர்ட், ஓய்வு பெற்ற ஆசிரியை செல்வி ப.கனகசூரியம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நூலுக்கான நயவுரையினை மாவட்ட கலாசார இணைப்பாளர் ரி.மலர்ச்செல்வன் நிகழ்த்தினார்.
வருடா வருடம் வெளியிடப்படும் பேழை சஞ்சிகையானது மாணவர்கள், ஆசிரியர்களின் பல்வேறு பட்ட ஆக்கங்களை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .