2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

திருமணத்துக்கு அவசரம்?

George   / 2016 மே 23 , பி.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிவூட் நடிகர் சல்மான் கான் காதலிக்கும் தொலைக்காட்சி நடிகையான லூலியா, இசைக்கலைஞர் ஒருவரை ஏற்கெனவே திருமணம் செய்து கொண்டவர் என்ற தகவல் பரவியுள்ள நிலையில் அதற்கு லூலியா மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆண்டுகளில் அரைச் சதத்தை தொட்டுள்ள பொலிவூட்டின் பிரபல நடிகரான சல்மான்கான் இதுவரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த நிலையில் ருமேனியா நாட்டைச் சேர்ந்த டி.வி. நடிகை லூலியா என்பவருடன் அவருக்கு காதல் மலர்ந்துள்ளதாக செய்தி வெளியானது.

அண்மையில், சல்மான்கானின் தாய் மற்றும் சகோதரியுடன் லூலியா, மும்பை விமான நிலையத்தில் இருந்தார். இதையடுத்து நடிகை பிரீத்தி ஜிந்தா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சல்மான்கான்- லூலியா காதல் ஜோடியினர் கலந்து கொண்டு காதல் நெருக்கத்தை காண்பித்தனர்.

மேலும் இந்த ஆண்டில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல் பரவியது.
எனினும், 'எனது திருமணம் எப்போது என்பது பற்றி ஊடகங்களுக்கு தெரிவிக்க மாட்டேன், அப்படி திருமணம் செய்து கொள்ளும்போது, அதை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வேன்' என்று சல்மான்கான் தெரிவித்து இருந்தார்.

'வதந்திகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. ஆனால், உண்மையை நான் விளக்க விரும்புகிறேன். நான் திருமண உடையை உடுத்துவதில் அவசரம் காட்டவில்லை. கடவுள் அனைவரையும் ஆசிர்வதிக்கட்டும்' என்று லூலியா, சொல்லியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .