2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

’பொறாமைபட தேவையில்லை’

Editorial   / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்பொழுது வெளியாகியிருக்கும் சீமராஜா, திரைப்படம் குறித்து, சிவகார்த்திகேயன் பேட்டியளிக்கையில், சீமராஜாவின் கதையானது காமெடி , குடும்ப உறவுகள், காதல் ஆகியவற்றுடன்  தயாராகி உள்ளது. இந்த படத்தில் தான் ராஜாவாகவும், இந்த காலத்து இளைஞனாகவும் நடித்திருப்பதாகவும், தமிழ் மண் மீதான ஈர்ப்பை படம் பிரதிபலிப்பதுடன், சண்டை காட்சிகளை இரத்தம், குரூரம் இல்லாமல் படமாக்கியிருப்பதாகவும் தெரிவித்தார்

மேலும் ரஜினிகாந்தின் எந்த மாதிரி படங்களை திரையில் பார்த்து ரசித்தோமோ, அதுமாதிரியே கதைகளில் தான் தற்பொழுது நடிப்பது சந்தோஷம் என்று கூறியதுடன் ஆறு மாதத்துக்கு ஒரு படம் நடிக்க வேண்டுமென ஆசைப்படுவதாகவும்,  ஆனால் தற்பொழுது இருக்கும் இடத்தை பார்த்து சிலர் பொறாமைபடுவதாகப் பேசுவதாகவும், இங்கு யாரும் ஒரு இடத்தை அவர்களாக எடுக்க முடியாது அத்துடன் அந்த இடம் கொடுக்கப்படுவதுதான். அதுக்காக  பொறாமைப்பட தேவை இல்லையென சிவகார்த்திகேயன் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X