2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

பீல் பண்ணும் த்ரிஷா?

George   / 2016 ஜூலை 10 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் நடித்த சிம்பு-த்ரிஷா ஜோடியை அன்பானவன் அசராதவன் அடங்காதவன்தி ரைப்படத்திலும் இணைக்க விரும்பிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் ஆசை நிறைவேறாமல் போய்விட்டது.

திரைப்படத்தின் கதையைக்கேட்ட த்ரிஷா, தந்தையாக நடிக்கும் சிம்புவுக்கு தன்னை ஜோடியாக நடிக்க சொன்னதால், 'நான் முதிர்ச்சியான வேடத்தில் நடித்தால் பின்னர் தொடர்ந்து அந்த மாதிரியே நடிக்க அழைப்பார்கள்' என்று மறுத்து விட்டார்.

அதனையடுத்து, அந்த வேடத்தில் நடிக்க ஸ்ரேயா ஒப்பந்தமாகிவிட்டார். ஸ்ரேயா, இப்போது இமேஜ் பார்ப்பதில்லை. கதை மற்றும் தனது முக்கியத்துவத்தை மட்டுமே பார்த்துதான் திரைப்படங்களை ஓகே செய்கிறாராம்.

கதைப்படி சிம்புவுடன் அவருக்கு நிறைய ரொமான்ஸ் காட்சிகள் உள்ளதாம். ஒரு டூயட்டும் உள்ளதாம். 
அதனால், இப்போது அந்த திரைப்படத்தில் நடிக்க மறுத்த                                                                                                                      
த்ரிஷா, திரைப்படம் திரைக்கு வரும்போது ஒரு நல்ல திரைப்படத்தை இழந்து விட்டோமே என்று பீல் பண்ணுவார் என்கிறார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .