2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

’ஸ்பைடர்’ திரையிடல் திகதி அறிவிப்பு

George   / 2017 மே 29 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சுப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடித்துள்ள “ஸ்பைடர்” திரைப்படத்தின் டீசர் மற்றும் திரைப்படம் வெளியாகும் திகதி விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடக்ஷன்ஸ் பணிகள் தொடங்கியுள்ள இந்தத் திரைப்படத்தின் படத்தின் இதன்படி டீசர், நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இந்தத் திரைப்படம் தசரா திருநாளில் வெளியாகவுள்ளது என்ற தகவலை மகேஷ்பாபு தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

மகேஷ்பாபு நடிக்கும் முதல் நேரடி தமிழ்த் திரைப்படமான இதில், ராகுல் ப்ரித்திசிங், எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஹரீஸ் ஜெயராஜ் இசையமைக்க சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .