2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

சொந்த நிறுவனம் தொடங்குகிறார் அஜித்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 02 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரபல்யமான நடிகர்கள் தங்களுக்கென்று சொந்த தயாரிப்பு நிறுவனங்களை வைத்திருப்பதொன்றும் புதிதல்ல. சொந்தமாக தயாரிப்பு நிறுவனங்களை வைத்திருப்பதால் பல தடங்கல்களை இல்லாமல் செய்யலாம் என்பது நடைமுறையில் கண்ட உண்மை என்பதால், பல முன்னணி நடிகர்களும் தங்களுக்கென்று சொந்த தயாரிப்பு நிறுவனங்களை நிறுவத் தொடங்கியுள்ளனர்.

அந்தவகையில் நடிகர் அஜித்குமாரும் தனக்கென சொந்தமாக தயாரிப்பு நிறுவனமொன்றை உருவாக்க தீர்மானித்திருக்கிறாராம். அந்நிறுவனத்திற்கு 'குட்வில் என்டெர்டெய்ன்மென்ட்' (Goodwill Entertainment) என்று பெயர் வைத்திருக்கிறாராம்.

தனது நண்பர்கள் சிலரின் ஒத்துழைப்புடன் உருவாக்கவிருக்கும் இந்த தயாரிப்பு நிறுவனத்தினூடாக படங்களை தயாரிக்கும் உத்தேசமும் இருக்கிறதாம். முதன்முதலாக அஜித்தின் படத்தினை இந்நிறுவனத்தினூடாக தயாரிப்பது பற்றி கலந்தாலோசிக்கப்படுகிறதாம். அநேகமாக அந்தப் படத்தின் அறிவிப்போடு தனது சொந்த நிறுவனத்தையும் அறிமுகப்படுத்த அஜித் ஆலோசிப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0

 • தாஸ் Monday, 04 October 2010 11:37 AM

  நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்தை முன்னுக்கு கொண்டு வந்த அஜித்துக்கு இது சின்ன விஷயம். பல வெற்றி படங்கள் அஜித்திடம் இருந்து நழுவிப்போனதுக்கு அவரது தயாரிப்பாளர்களே காரணம். வித்தியாசமான கதையில் நடிப்பதில் கமலுக்கு பின் அஜித் தான். அதற்கு பின்னர்தான் சூர்யா, விக்ரம்.

  Reply : 0       0

  xlntgson Thursday, 18 November 2010 08:48 PM

  அப்படியா, தெரியாதே? நான் அஜித்துக்கு விருப்பம் இல்லை!
  மற்றவர்களுக்கும் அவ்வளவாக விருப்பம் இல்லை!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--