Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 மார்ச் 06, சனிக்கிழமை
A.P.Mathan / 2010 ஒக்டோபர் 09 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகநாயகன் கமல் ஹாசனின் இயக்கத்தில் சூர்யா, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், தெலுங்கில் பிரபல நடிகர் ரவி தேஜா ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளதாக பரபரப்பான தகவலொன்று கசிந்திருக்கிறது.
மிகவும் பிரமாண்டமாக முறையில் தயாராகவுள்ள இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் போன்ற அனைத்தையும் உலகநாயகன் கமல் ஏற்கவிருக்கின்றாராம். தென்னிந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களை ஒன்றிணைத்து ஒரே படத்தில் தோன்ற வைப்பதுதான் கமலின் நோக்கம். அதற்கான முயற்சிகளில் இப்போது கமல் இறங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தனது 'ஹேராம்' படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் பலரை ஒன்றிணைத்த பெருமை கமலுக்கிருக்கிறது. அந்தவரிசையில் தனது அடுத்த முயற்சியினையும் தொடங்கவிருக்கிறாராம் கமல். இப்பிரமாண்ட படத்தின் கதாநாயகிகளாக ஜெனிலியா, திரிஷா, தீபிகா படுகோன் ஆகியோர் நடிக்கவிருக்கிறார்களாம்.
அனைத்து நட்சத்திரங்களும் ஒன்றிணையும் இப்படத்தில் கமலும் பிரதான பாத்திரமொன்றில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. 'மன்மதன் அம்பு' படப்பிடிப்புகள் நிறைவடைந்து வெளிவருவதற்கு தயாராகியிருக்கும் இத்தருணத்தில் புதிய படம்பற்றி கசிந்திருக்கும் இத்தகவல் உண்மையானதாக இருக்குமேயானால் கமல் ரசிகர்களுக்கு சக்கரைப் பொங்கல் சாப்பிட்டதுமாதிரி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வெகுவிரைவில் இப்புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளிவரும் என கமலுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
06 Mar 2021
06 Mar 2021
05 Mar 2021