2020 நவம்பர் 25, புதன்கிழமை

முட்டாளாகிய சத்தியராஜ்...

A.P.Mathan   / 2010 நவம்பர் 06 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிறியதொரு கதாபாத்திரமாக இருந்தாலும் ஷங்கரின் இயக்கத்தில் நடிக்கவேண்டும் என்று இந்திய நட்சத்திரங்கள் பலபேர் காத்திருக்க, ஏற்கனவே 'சிவாஜி' படத்தில் நடிப்பதற்கு வந்த வாய்ப்பை உதறித்தள்ளியவர் சத்தியராஜ். ஆனால் இப்போது மறுபடியும் இயக்குநர் ஷங்கரின் '3 இடியட்ஸ்' படத்தில் நடிப்பதற்கு சம்மதித்திருக்கிறார் நடிகர் சத்தியராஜ்.

ஹிந்தியில் பல சாதனைகளை முறியடித்து, பல விருதுகளையும் பெற்றுக்கொண்ட '3 இடியட்ஸ்' படத்தினை ஷங்கர் தமிழில் இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் வெகு விரைவில் ஆரம்பிக்கவிருக்கின்றன. இப்படத்திற்கு தேவையாக கதாபாத்திரங்களை ஷங்கர் தேடி எடுத்துள்ளார். இந்நிலையில்தான் நடிகர் சத்தியராஜுக்கும் ஒரு பாத்திரத்தை ஒதுக்கி கொடுத்துள்ளார்.

ஏற்கனவே 'சிவாஜி' படத்தில் ரஜனிக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்தவர் இம்முறை உடனே ஒத்துக்கொண்டுள்ளார். இதுபற்றி சத்தியராஜ் குறிப்பிடுகையில்... '3 இடியட்ஸ் படத்தில் எனக்கு முக்கியமான ஒரு பாத்திரம் காத்திருக்கிறது. இது எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு. சிவாஜி படத்தில் எனக்கு அவ்வளவு முக்கியமான பாத்திரம் இல்லாததால் நடிப்பதற்கு மறுத்திருந்தேன். ஆனால் இப்போது எனது நடிப்பிற்கு நல்ல தீனி கிடைத்திருக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0

  • nnassm Sunday, 07 November 2010 09:31 PM

    நடிப்புக்கு மதிப்பில்லை இகாசுக்கும் பிரபலத்துக்கும் மாத்திரம்தான் மதிப்பு. சத்தியராஜை விட நல்ல கலைஞர்கள் இன்னும் ஏராளம் உண்டு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .