2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

சோனாவால் சோகமான சரண்...

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 19 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

கவர்ச்சி நடிகை சோனாவின் பாலியல் குற்றச்சாட்டு முறைப்பாடு காரணமாக சோகமாகியுள்ளார் பாடகரும், தயாரிப்பாளருமான எஸ்.பி.பி.சரண். இதனால் தான் சிலவேளை பொலிஸாரால் கைது செய்யப்படலாம் என்று அஞ்சி முன் பிணை எடுத்துள்ளாராம் சரண்.

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியாகி சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம் மங்காத்தா. படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் திரைப்படத்தில் மற்றுமொரு கதாநாயகனான வைபவ், தனது வீட்டில் விருந்தொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இதில் வெங்கட்பிரபு, எஸ்.பி.பி.சரண், நடிகை சோனா உட்பட சுமார் 30 பேர் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விருந்தின் போது தனது கையைப் பிடித்து இழுத்த சரண், தன்னை மானபங்கம் செய்ய முயற்சித்தார் என்றும் தன்னுடன் தங்கும்படி நிர்ப்பந்தம் செய்தார் என்றும் நடிகை சோனா, பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தி வரும் பொலிஸார், பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ், சரணுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளதுடன் விருந்தில் கலந்துகொண்ட அனைவரிடமும் விசாரணையினையும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையிலேயே, தான் பொலிஸாரால் கைது செய்யப்படலாம் என்றெண்ணி, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முன் பிணை கோரி மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார் எஸ்.பி.பி.சரண். சோனாவின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0

 • Anniyan Thursday, 22 September 2011 01:20 PM

  ஒ சோனா ஐ லவ் யூ லவ் யூடா..........

  Reply : 0       0

  Wijay Tuesday, 20 September 2011 11:46 PM

  good luck.

  Reply : 0       0

  ziyath Tuesday, 20 September 2011 11:52 PM

  சோனாவால் சோகமான சரண் பாவம்.

  Reply : 0       0

  hamaza Wednesday, 28 September 2011 09:49 PM

  அதானே ....sona எண்டா சும்மாவா???

  Reply : 0       0

  Akkaraipattu Friday, 23 September 2011 06:38 AM

  Sona எண்ட சும்மாவா ............

  Reply : 0       0

  MUNAS Sunday, 02 October 2011 10:09 AM

  அதேதான் சோனானா சும்மாவா ????????//

  Reply : 0       0

  Mathy Tuesday, 20 September 2011 03:33 PM

  சோனா, சும்மா படம் கட்டாதே.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X