2021 ஜனவரி 27, புதன்கிழமை

'துப்பாக்கி' தவறுக்கு பிராயச்சித்தம்; முஸ்லிமாக நடிப்பாராம் விஜய்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 16 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


துப்பாக்கி திரைப்படத்தில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சி இடம்பெற்றதற்குப் பிராயச்சித்தமாக நடிகர் விஜய் ஒரு திரைப்படத்தில் முஸ்லிமாக நடிப்பார் என்று அறிவித்துள்ளார் அவரது தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்.

துப்பாக்கி திரைப்படத்தில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டி அவமானப்படுத்திவிட்டதாக 24 முஸ்லிம் அமைப்புகள் போர்க்கொடி பிடித்துள்ளன. நபிகள் நாயகத்தை அவமதித்த ஹொலிவூட் திரைப்பட விவகாரத்தில் இந்த அமைப்புகள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டங்கள் பல நகரங்களை ஸ்தம்பிக்க வைத்துவிட்டன.

இதே நிலை துப்பாக்கி திரைப்படத்துக்கு நேர்ந்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்துபோன துப்பாக்கி தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் விஜய் ஆகியோர், அதிரடியாக முடிவொன்றை அறிவித்துள்ளனர்.

அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களையும் நேற்று சென்னையில் சந்தித்த இயக்குநர் முருகதாஸ், தாணு, எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோர், அவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினர். காட்சிகளை நீக்கவும் ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து, கருத்து வெளியிட்டுள்ள விஜயின் தந்தையும் இயக்குனருமாக எஸ்.ஏ.சந்திரசேகரன், 'என் மகன் விஜய் தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் செல்லப்பிள்ளை. ஜாதி, மத வேறுபாடுகளே அவனுக்கு இல்லை.

இந்த திரைப்படத்தில் இஸ்லாமிய உறவுகளுக்கு எதிராக தெரியாமல் இடம்பெற்ற சில காட்சிகளுக்காக வருந்துகிறோம். இதற்கு பிராயச்சித்தமாக என் மகன் ஒரு திரைப்படத்தில் முஸ்லிம் வேடத்தில் நடிப்பார்' என்றார்.
  Comments - 0

 • Fawzan Monday, 26 November 2012 10:36 AM

  முட்டாள்தனமாக கதைக்காதீங்க.... ஈழப் பிரச்சினையைக் காட்டிய எந்த தமிழ்படமும் திரயிடப்படவில்லை.. எதற்கு அது?? உங்களைப் போல எமக்கும் மார்க்கப்பற்று மிக அதிகமாகவே இருக்கிறது.... தயவு செய்து தெரியாத விடயங்களில் தலையிடாமல் இருப்பதே எல்லோருக்கும் நல்லது....

  Reply : 0       0

  Reshan Wednesday, 21 November 2012 12:52 PM

  வட இந்தியாவில் அனேகம் தீவிரவாதிகள் முஸ்லீம்தானே?? இதில் என்ன பிழை இருந்தது?? இங்கே சிங்களப் படங்களில் தமிழர்களைத் தீவிரவாதிகளாகக் காட்டுவதில்லையா?? எல்லாவற்றிற்கும் போர்கொடி தூக்குவதே இப்போ பிழைப்பாகப் போய்விட்டது.

  Reply : 0       0

  Reshan Wednesday, 21 November 2012 12:53 PM

  அவர் எப்படியோ இருக்கட்டும். நீங்கள் யார் என்று நினைவிருக்கின்றதா?

  Reply : 0       0

  zahida islam Tuesday, 11 December 2012 12:56 PM

  மா அல்லா மன்னிமப்பன்.

  Reply : 0       0

  Abdul Saturday, 17 November 2012 12:35 AM

  அதெப்படி தெரியாமல் இவர்கள் திரைப்படத்தில் காட்சிகள் இடம்பெற்றன, இதென்ன பிட்டு படமா தெரியாமல் காட்சி சேர்ப்பதற்கு? தயவு செய்து விஜய் முஸ்லிமாக நடிக்க வேண்டாம், எங்களை விட்டு விடுங்கள்

  Reply : 0       0

  nifras Saturday, 17 November 2012 10:04 AM

  முதல் படத்தை எடுத்துவிட்டு அதற்கு பிறகு தெரியாது என்று சொன்னால் என்னப்பா சின்ன பிள்ளையா இவரு........?

  Reply : 0       0

  yasir Sunday, 02 December 2012 03:10 AM

  விஜய்க்கு இது கடைசி தவனையாக இருக்கும்......

  Reply : 0       0

  nallavan Sunday, 18 November 2012 03:33 AM

  நல்ல நெத்தியடி................

  Reply : 0       0

  shahim Sunday, 18 November 2012 05:45 AM

  As a srilankan I boycott this movie

  Reply : 0       0

  imthiyas Sunday, 18 November 2012 11:17 AM

  இதற்கு முன்னரும் இதுபோன்ற திரைபடங்கள் வந்துள்ளன.ஆனால் இனிமேலும் பொறுமையாய் இருந்தால் இது இன்னும் தொடரும்.

  Reply : 0       0

  siva Sunday, 18 November 2012 05:37 PM

  படத்தில உண்மையதான் சொல்லி இருக்காங்க.

  Reply : 0       0

  lankan Monday, 19 November 2012 08:21 AM

  என்ன சிவா மறந்திடீங்களா...? ஸ்ரீலங்கால ஒரு காலத்தில் நீங்க யார் என்று?

  Reply : 0       0

  realhero Monday, 19 November 2012 03:54 PM

  எது உண்மை? இஸ்லாத்தை பற்றி உங்களுக்கென்ன தெரியும்?

  Reply : 0       0

  nasrath Tuesday, 20 November 2012 07:41 AM

  என்ன சொல்லுறீங்க சிவா. வார்த்தையை கவனமாக பயன்படுத்துங்க. நாங்களஃ மற்றவர்களை மதிக்கின்றோம். கேவலப்படுத்த மாட்டோம்.

  Reply : 0       0

  zamroodh Tuesday, 20 November 2012 08:09 AM

  தயவு செய்து முஸ்லிமாக நடிக்க வேண்டாம் என்று சொல்லுங்கள், வழமைபோல் நடிக்க சொல்லுங்கள். ஆனால் முஸ்லிம்களை இழிவுபடுத்தாமல், முஸ்லிமாக நடித்தாலும் அதில் எங்கள் மார்க்கத்துக்கு முரணானவை இடம்பெறவே செய்யும்.

  Reply : 0       0

  குமார் Tuesday, 20 November 2012 10:31 AM

  துரதிஷ்டவசமாக உலகத்தில் உள்ள அநேகமானோர் வன்முறையையே விரும்புகின்றனர்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .