2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

அசினுக்கு கோலிவுட்டில் தடை?

Kogilavani   / 2013 ஜூலை 26 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


கஜினி ரீ-மேக் மூலம் இந்திக்கு சென்ற அசின்,  போன வேகத்திலேயே பிரபல நடிகையாகி விட்டார். அதன் பின், தமிழ்ப் பட வாய்ப்புகள் அவரை தேடிச்சென்ற போது நடிக்க மறுத்தவர் தற்போது மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க ஆசைப்படுகின்றார்.

பாலிவுட்டில் அசினின் மார்க்கெட் சரிந்து விட்டதால் மீண்டும் கோலிவுட்டில் கொடிநாட்ட ஆசைப்படுகிறார்.

'துருவ நட்சத்திரம் படத்தில், அசினுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஏற்கனவே, ஒரு இந்தி படப்பிடிப்புக்காக அசின் இலங்கைக்கு வந்தபோது சர்ச்சை ஏற்பட்டது.

'அசின் இலங்கைக்கு செல்ல வரக்கூடாது என, எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கோபமடைந்த அசின், 'நான் ஒன்றும், தமிழ் நடிகை இல்லை என்று கூறி விட்டுச் சென்றார். அதனால், இப்போது அதை முன் வைத்து, 'அசினுக்கு தமிழில் வாய்ப்பு தரக்கூடாது என்று, சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல்,  மும்பைக்கே திரும்பி விட்டார் அசின்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--