George / 2015 ஓகஸ்ட் 03 , பி.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

'பாகுபலி எவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்கப்பட்டுள்ள திரைப்படம். இந்தப் திரைப்படத்தில் சம்பந்தப்பட்டுள்ள அனைவருமே ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். நீங்கள் பாயத் தயாராக இருந்தால் நீங்கள் மட்டுமே வானத்தைத் தொடுவீர்கள்' என ஷாருக்கான் கூறிப்பிட்டுள்ளார்.
இதனை, ஷாருக்கான் தன்னுடைய டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டு தனது பாராட்டினை தெரிவித்துள்ளார். ஷாருக்கானின் பாராட்டுக்கு, பாகுபலி திரைப்படக் குழுவினர் பலரும் நன்றி தெரிவித்துள்ளனர்.
பாகுபலி திரைப்படம் வெற்றிகரமாக 25ஆவது நாளைக் கடந்துள்ளது. திரைப்படம் வெளிவந்த இந்த மூன்று வாரங்களில் உலகம் முழுவதும் இதுவரை சுமார் 470 கோடி இந்திய ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வார இறுதிக்குள் அது 500 கோடி இந்திய ரூபாயைத் தாண்டி விடும் என்கிறார்கள். தமிழில் மட்டும் சுமார் 60 கோடி இந்திய ரூபாய் வரை திரைப்படம் வசூலித்துள்ளதாம்.
15 minute ago
40 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
40 minute ago
3 hours ago
4 hours ago