2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

நான் காதலிக்கவில்லை

George   / 2015 ஓகஸ்ட் 04 , பி.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நான் எந்த நடிகரையும் காதலிக்கவில்லை. நிறைய கதாநாயகர்களுடன் நடித்து விட்டேன். அவர்களுடன் எனக்கு தொழில் ரீதியான தொடர்பு மட்டுமே இருந்தது வேறு எந்த உறவும் கிடையாது என நடிகை ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.

அத்துடன் எனக்கு பொருத்தமான மாப்பிள்ளை கிடைத்ததும் திருமணம் செய்துகொள்வேன் எனவும் கூறியுள்ளார்.
2001ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த இஷ்டம் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான ஸ்ரோயா, தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தார். தமிழில் ரஜினி ஜோடியாக சிவாஜி திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். 

தற்போது தமிழில் ஸ்ரேயாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் இல்லை என்ற நிலையில்; ஸ்ரேயாவை தெலுங்கு கதாநாயகர்களுடன் இணைத்து கிசு கிசுக்கள் வந்த வண்ணம் இருந்தன. இதற்கு பதில் அளிக்கையில் ஸ்ரேயா இதனை கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .