2021 மார்ச் 03, புதன்கிழமை

சாதனை நாயகன்

George   / 2015 ஓகஸ்ட் 10 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

20ஆண்டுகளுக்கு பிறகு ஒரே வருடத்தில் 3 திரைப்படங்களை வெளியிட்டு சாதனை படைக்க நடிகர் கமலஹாசன் காத்திருக்கின்றார்.

உத்தமவில்லன், பாபநாசம் திரைப'படங்களை தொடர்ந்து, கமல்ஹாசன், தற்போது தூங்காவனம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடையும் தருவாயில் உள்ளது. வரும் தீபாவளி அல்லது இந்தாண்டு இறுதிக்குள் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

1995ஆம் ஆண்டுக்கு பிறகு, 20 ஆண்டுகள் கழித்து, ஒரே ஆண்டில் மூன்று திரைப்படங்களை வெளியிட்ட பெருமை கமலை சேரும். ஆரம்ப காலத்தில், வருடத்துக்கு ஏழு, எட்டு திரைப்படங்களில் எல்லாம் கமல் நடித்துள்ளார். 

பின் பெரிய நடிகரான பிறகு, திரைப்படங்களின் அளவை படிப்படியாக குறைத்துக்கொண்டார். 1995ஆம் ஆண்டில், சதிலீலாவதி, குருதிப்புனல் மற்றும் சுபசங்கல்பம் (தெலுங்கு) என அவரது நடிப்பிலான மூன்று திரைப்படங்கள் வெளியாகின.

அதற்குப்பின், 20 ஆண்டுகள் கழித்து, தற்போது தான், ஒரே ஆண்டில் 3 திரைப்படங்கள் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தூங்காவனம் திரைப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியானால், ஒரே ஆண்டில் 4 திரைப்படங்கள் வெளியிட்ட அவரது சாதனையை, அவரே உடைக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதாக சினிமா ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .