Editorial / 2017 மே 28 , பி.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மாவட்டத்தில் அதிகரித்துள்ள டெங்கு நுளம்பை அழித்தல் தொடர்பாக, கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுப்பதற்கு, அனைத்து அரச அதிகாரிகளுக்கும், தொழில்நுட்ப, தொழில்நுட்பக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
அழைப்பு விடுத்துள்ளார்.
குறித்த கலந்துரையாடல், எதிர்வரும் புதன்கிழமையன்று இடம்பெறவுள்ளது.
மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், சுகாதார சேவைகள் பிரிவின் தலைவர்கள், பொலிஸ் அதிகாரிகள், வலயக் கல்வி பணிப்பாளர்கள் ஆகிய அனைவருக்கும், இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்துக்குள் பரவி வரும் டெங்கு நுளம்பை அழித்து மேலும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டமொன்றை உருவாக்குவதற்காக, இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026