2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் விரைவில் அகதிகளாக ஆஸ்திரேலியா பயணம் ?

Super User   / 2010 மார்ச் 28 , பி.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆயிரக்கணக்கான இலங்கைத்தமிழ் அகதிகள் ஆஸ்திரேலியவை நோக்கி விரைவில் செல்லவுள்ளனர் என டெயிலி டெலிகிராப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

காலநிலை சீரடைந்ததும் சுமார் 5000 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து ஆஸ்திரேலிய கடற்பரப்புக்குள் உயிராபத்தையும் பொருட்படுத்தாது இவர்கள் பயணிக்கவுள்ளனர் என்றும் அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

வழமையான கடல்வழிப்பாதையில் மலேஷியா,இந்தோனேஷியா ஆகிய நாடுகளினூடாக செல்வதை தவிர்த்து,நேரடியாக கிறிஸ்மஸ் தீவினை நோக்கி செல்வதற்கு அகதிகளைக்கொண்டு செல்பவர்கள் தீர்மானித்துள்ளனர் என சிரேஷ்ட கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .