2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

பல்கலைக்கழக மாணவர் மீது பொலிஸார் தண்ணீர் பீய்ச்சியடித்து தாக்குதல்

Super User   / 2010 மே 20 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, வோர்ட் பிளேஸில் அமைந்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் தண்ணீரைப் பிரயோகம் செய்தனர்.

இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் கொழும்பு, வோர்ட் பிளேஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் மாணவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தையும் நடத்த தயார்நிலையில் உள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆணைக்குழுக் கட்டிட வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட மேற்படி மாணவர்களை  பொலிஸார் தடுத்து நிறுத்த முற்பட்ட போது இரு தரப்பினர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றது.

இந்த மோதல் பல மணிநேரங்களாக இடம்பெற்றுவந்ததை அடுத்து மாணவர்களைக் கலைப்பதற்காக கலகம் அடக்கும் பொலிஸார் அவ்விடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன் பெரும் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாடத்தை அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.(R.A)

  Comments - 0

  • sheen Friday, 21 May 2010 08:14 PM

    தண்ணீர் அடித்தும் போகாவிட்டால் கண்ணீர்புகை குண்டுகள் வீசப்படும். ஆனால் இரகசிய கமெராக்களால் கண்காணிக்க இயலுமாக இருந்தால் அமைதியாக தனது எதிர்ப்பை தெரிவிக்கும் போராட்டக்காரரில் குழப்பம் விளைவிப்பவர் யார் என்று கண்டுபிடிக்க இயலாதா? எதிராளிகள் குழப்பம் விளைவிப்பவர்களை கூட்டத்துக்குள் அனுப்பினர் என்பதே அமைதியான போராட்டங்கள் வன்முறையில் முடியக்காரணம்! இந்த நவீன காலத்திலும் மிக பழைமை வாய்ந்த போராட்ட முறைகளும் அதை அடக்க அந்த பழைய கண்ணீர்புகையும். உலகம் முன்னேறுகிறதா, பின்னேறுகிறதா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--