Kogilavani / 2016 மே 31 , மு.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமத்திய மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள், ஆளுநர் மற்றும் பிரதான செயலாளர் உள்ளிட்ட மாகாணச் செயலாளர்கள் அனைவரையும், இன்றைய (31) தினத்தில், வடமத்திய மாகாண மேல்நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, நீதிபதி ஆதித்ய காந்த மத்தும பட்டபெதிகே, நேற்று உத்தரவிட்டார். இந்த உத்தரவினை, நீதிமன்ற அதிகாரியினூடாகப் பிரதிவாதிகளுக்கு நேற்றைய (30) தினத்திலேயே அறிவிக்குமாறும், நீதிமன்றப் பதிவாளருக்கு, நீதிபதி கட்டளையிட்டார்.
அரசாங்க மற்றும் வடமத்திய மாகாண சபையின் கேள்விப்பத்திர நடைமுறையை மீறி, அரச நிர்மாண ஒப்பந்தங்களை, அரசியல் நண்பர்களுக்கு பெற்றுக்கொடுத்ததன் மூலம், முதலமைச்சரும் அவர் சார்ந்தவர்களும், அரச நிதியினை மோசடி செய்துள்ளனர் என்று தெரிவித்துத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற போதே, மேற்கண்ட அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் பேஷல ஜயரத்ன, ஆளுநர் பி.பீ.திசாநாயக்க, அமைச்சர்களான புஞ்சிபண்டா ரத்நாயக்க, கே.எச்.நந்தசேன, எஸ்.எம்.ரஞ்சித், எச்.பீ.சேமசிங்க, பிரதான செயலாளர் கே.ஏ.திலகரத்ன, உள்ளிட்ட மேலும் சில அமைச்சுக்களின் செயலாளர்களை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டே, மேற்படி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 minute ago
2 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago
05 Nov 2025