2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

இனங்களுக்கிடையில் ‘நல்ல ஆதரவு உள்ளது’

Kogilavani   / 2017 ஜூன் 14 , மு.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

“சின்னச் சின்னப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு, இனங்களுக்கு இடையில் பிரச்சினைகளை ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டாலும், இனங்களுக்கு இடையில் பலமான நல்ல ஆதரவும் மற்றும் நல்லிணக்கமும் உள்ளது” என்று, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி (பொறியியலாளர்) தெரிவித்தார். 

“சின்னச் சின்னக் குழுக்கள், பல்வேறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றன. அதாவது, ஒரு நகரத்தில் இருக்கின்ற முடிச்சுமாறி (பிற்பொக்கட்), பெண்களை வன்புணர்வுக்கு உட்படுத்தும் நபர்கள் இருப்பதை போல, இந்த குழுக்களும் இருக்கின்றன” என்றும் அவர் குறிப்பிட்டார்.   

சகலரும் ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்தி வாழ்வார்களாயின் எவ்விதமான பிரச்சினையும் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.   

பாதுகாப்பு அமைச்சில் நேற்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   

இதேவேளை, “நாட்டில் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை கட்டுப்படுத்த முப்படையினரை ஈடுபடுத்துவது தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்திருந்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், முஸ்லிம் கடையொன்றுக்கு தீ வைத்தது அல்லது பிக்குவொன்றை தாக்கிய செய்திகள் தொடர்பில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X