2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

இரு நாடுகளுக்கும் இடையில் உறவை பலப்படுத்த வேண்டும்-ஜனாதிபதி

Super User   / 2010 மே 14 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மற்றும் பிரிட்டிஷ் நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் பலப்படுத்த வேண்டும் என புதிய பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூனிடம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷில் புதிய பிரதமராக பதவியேற்றிருக்கும்  டேவிட் கமரூனுக்கு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே, அவர் இதனைக் கூறினார்.

பலமானதும், ஸ்திரமானதுமான வழிகாட்டலை புதிய பிரிட்டிஷ் பிரதமர் அமைப்பார் என தான் நம்புவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்திருக்கும் நிலையில் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றங்கள், மீள்கட்டுமானம், நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டு வருவதாகவும் மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார்.

அண்மையில் இடம்பெற்றிருந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றின்போது, இலங்கை அரசாங்கத்திற்கு மக்களினால் ஆணை வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கமையவே பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றங்கள், மீள்கட்டுமானம், நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டுவருவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--