2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

இலங்கையர்கள் ஐவர் அவுஸ்திரேலியாவில் கைது

Editorial   / 2020 ஜனவரி 17 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருட்டு சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய இலங்கையர்கள் ஐவர் அவுஸ்திரேலியாவில்  கைதுசெய்யப்பட்டுள்ளனரென, விக்டோரியா பொலிஸார் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

7 பேரைக் கொண்ட குறித்த திருட்டுக் குழுவில் இலங்கையர்கள் ஐவரும் உறுப்பினர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த திருட்டுக் குழுவினர் அவுஸ்திரேலியாவின் பிரதான நகரங்களிலுள்ள ரயில் நிலையங்கள், சுப்பர் மாக்கட் உள்ளிட்ட இடங்களில் குறித்த சந்தேகநபர்கள் திருட்டில் ஈடுபட்டவர்களென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மெல்போர்ன் நகரில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்  இவர்களுள் பெண்கள் மூவரும் ஆண்கள் நாள்வரும் அடங்குவதுடன் இவர்கள் 25- 38 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .