2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

இலங்கை, மாலைதீவு ஜனாதிபதிகள் பேச்சுவார்த்தை

Suganthini Ratnam   / 2010 ஜூலை 07 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நஷிட்டும் மாலைதீவு தலைநகர் மாலேயில் இன்று புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை  மேற்கொண்டு இன்று காலை மஹிந்த ராஜபக்ஷ  மாலைதீவை சென்றடைந்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவது, இருதரப்பு அபிவிருத்தி கூட்டுறவு, மாலைதீவு நாட்டின் அரசியல் நிலைமைகள் மற்றும் அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிவகைகள் ஆகியன தொடர்பில் இரு நாடுகளின் ஜனாதிபதிகளும் கலந்துரையாடியிருப்பதாக மாலைதீவு ஜனாதிபதி அலுவலகம் அறிக்கையில் தெரிவித்தது.

இந்நிலையில், மாலைதீவானது அரசியல் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருக்கும் நிலையில், தனது அழைப்பையேற்று தமது நாட்டிற்கு விஜயம் செய்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு மாலைதீவு ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

மாலைதீவு நாட்டுக்கான உதவிகளை வழங்குவதில் நட்பு ரீதியுடனும் கடமையுடனும்   இலங்கை செயற்படுமென்று இதன்போது மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்ததாக மாலைதீவு ஜனாதிபதி அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--