2025 ஜூலை 07, திங்கட்கிழமை

’உணவில் விஷம் வைத்து பிரபாகரனை கொலை செய்ய முயற்சிக்கவில்லை’

Editorial   / 2018 செப்டெம்பர் 09 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உணவில் விஷம் வைத்து அவரை கொலைச் செய்ய ஒருபோதும் நினைத்ததில்லை என ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இ​தேவேளை, ‘ஜனபலய’ எதிர்ப்பு பேரணியில் கலந்துக்கொண்டிருந்த பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்ட பக்கற் பாலில் விஷம் கலக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம், நாட்டுக்கு பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.

ஆகவே இது தொடர்பில் பொலிஸார் உரிய விசாரணைகளை மேற்கொண்டு, இச்சம்பவத்திற்கு பின்னால் உள்ளவர்கள் யார் என்பதை கண்டறிய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

புஞ்சி பொரளையிலுள்ள வஜிராஷ்ரம பௌத்த மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .