2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஊவாவிலுள்ள அரச நிறுவனங்களில் தமிழ்மொழியை முறையாக அமுல்படுத்த நடவடிக்கை

Yuganthini   / 2017 ஜூலை 16 , பி.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.செல்வராஜா   
ஊவா மாகாணத்திலுள்ள அரசசார் நிறுவனங்களில், தமிழ்மொழியை முறையாக அமுல்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளதாக, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.  

“ஊவா மாகாணத்தில், தமிழ்மொழி அமுலாக்கல் குறித்த விடயங்களை மேற்பார்வை  செய்யும் பணியை, தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், என்னிடம் ஒப்படைத்துள்ளார். எனவே, ஊவா மாகாணத்தின் அரசசார்பற்ற நிறுவனங்களில் தமிழ்மொழி அமுலாக்கலை சீராக நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைளையும் மேற்கொள்வேன்” என்றும் அவர் கூறினார்.   

இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர்,   

“ஊவா மாகாணத்திலுள்ள அரசசார்பற்ற நிறுவனங்களில், தமிழ்மொழி முறையாக அமுல்படுத்தப்படவில்லை எனில், அதனை எனது கவனத்துக்குக் கொண்டுவருமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.   

“குறிப்பாக, அரச நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள பெயர்ப்பலகைகளில் காணப்படும் தமிழ்மொழி பிழை, எழுத்துப்பிழைகள் உள்ளிட்ட விடயங்களை, எனது கவனத்துக்குக் கொண்டுவந்தால் அதற்கான மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்.   

அரசசார் நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள பெயர்ப்பலகைகள் மற்றும் அறிவிப்புப் பலகைகளில் தமிழ்மொழிப் பிழைகள் காணப்படுமாயின், அவ்விடயத்தில், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு தலையீடு செய்யும்.

பெயர்ப்பலகைகளை திருத்தம் செய்து, புதிய பலகைகளை பொருத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். இதற்கான செலவீனங்களை, தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சே பொறுப்பேற்றுக்கொள்ளும்.   

இது தொடர்பான விசேட சட்டமூலமும், அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, அங்கிகாரமும் பெறப்பட்டுள்ளது” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .