2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

'எட்கா' பற்றி வெளிப்படுத்துங்கள்

Gavitha   / 2016 மார்ச் 21 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அரசாங்கத்துடன் கைச்சாத்திடத் தீர்மானிக்கப்பட்டுள்ள எட்கா ஒப்பந்தம் தொடர்பான முழு விவரங்களையும் நாட்டுக்கு வெளிப்படுத்துமாறு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), அரசாங்கத்தைக் கோரியுள்ளது.

இந்த ஒப்பந்தம் தொடர்பில், நாட்டு மக்களுக்குப் போதிய புரிதல் இல்லை என்றும் மக்கள் விடுதலை முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, இந்தியாவுடன் கைச்சாத்திடவுள்ள இந்த ஒப்பந்தத்தின் பிரதியொன்று, இலங்கை அரசாங்கத்தினால் இந்தியாவிடம் ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டது. இந்த ஒப்பந்தம் தொடர்பில், இந்திய அரசாங்கம் தற்போது கவனம் செலுத்தி வருகின்றது என இலங்கையிலுள்ள இந்தியாவின் உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா அறிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் தொடர்பில், இலங்கை அரசாங்கத்தினால் இந்தியாவுக்கு அறிவுறுத்திய போதிலும், இலங்கையர்களுக்கு அது தொடர்பில் அறிவிக்காமல் இருப்பது பாரிய பிரச்சினையாகும் என, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X