2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

ஐ.எஸ்-இல் இணைவதற்கு முன்னர் கேரள தம்பதியினர் இலங்கைக்கு வந்தனராம்!

George   / 2016 ஜூலை 15 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த தம்பதியினர், ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவில் இணைந்துக் கொள்ள முன்னர் இலங்கைக்கு வந்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தம்பதியினர்  ஐ.எஸ்.ஐ.எஸ் குழுவில் இணைந்துக்கொள்வதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்துள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை இஸ்மிய கற்கை நெறிகளுக்கான முக்கிய இடமாக மாறிவருவதாகவும் அதன் காரணமாக இவர்களை போன்றவர்களால் அதிக சோதனையின்றி இலகுவாக இலங்கைக்கு செல்ல முடிவதாக இந்திய புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த தம்பதியினர் தமிழ்நாட்டிலிருந்து வந்து இரண்டு மாதங்கள் தங்கியிருந்துவிட்டு மீண்டும் கொச்சி சென்றதாகவும் மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் இந்திய புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .