2021 ஜனவரி 16, சனிக்கிழமை

ஐ.தே.கவின் தலைமைத்துவத்தை தீர்மானிக்க தலைமைத்துவ கவுன்ஸில்?

Editorial   / 2019 நவம்பர் 22 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த தலைவரை நியமனம் செய்வதற்காக, அக்கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, ஐ.தே.கவுக்குள்ளேயே தலைமைத்துவக் கவுன்ஸில் ஒன்றை அமைக்கவுள்ளார் என்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த வாரத்துக்குள் இந்தக் கவுன்ஸில் நிறுவப்படும் என்றும் கவுன்ஸிலின் முன்மொழிவின் பிரகாரமே, கட்சியின் அடுத்த தலைவர் நியமிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.தே.கவின் உறுப்பினர்கள், பொதுத் தேர்தலின் போது தங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளை எந்தளவு செயற்றிறனுடன் கையாண்டார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டே, தலைவருக்கான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தலைமைத்துவக் கவுன்ஸிலில், நாடாளுமன்ற உறுப்பினர்களான அகிலவிராஜ் காரியவசம், சஜித் பிரேமதாஸ, ஹரின் பெர்ணான்டோ, நவீன் திஸாநாயக்க ஆகியோர் அங்கம் வகிக்கவுள்ளனர் என்றும் தெரியவருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .