2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

ஐ.தே.க.வின் மறுசீரமைப்புக்கு சிறிகொத்தாவில் உயர்மட்ட பேச்சு

Super User   / 2010 மே 13 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள குழுவிற்கும் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரியவிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று மாலை கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில்  இடம்பெற்றதாக மறுசீரமைப்பு குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோசப் மைக்கல் பெரேரா தமிழ்மிரர் இணையதளத்திற்கு சற்றுமுன் தெரிவித்தார்.

இருப்பினும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் எதுவும் குறிப்பிட முடியாது என்றும் அவர் கூறினார்.

எப்போது உங்களின் முன்மொழிவுகள் நிறைவுபெறும் என்று தமிழ்மிரர் வினவியபோது, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை எமது முன்மொழிவுகளை கட்சித்தலைவரிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், எமது கட்சியின் மாகாண உறுப்பினர்கள் தங்களது முன்மொழிவுகளை வழங்கிக் கொண்டிருப்பதால், மறுசீரமைப்பு முன்மொழிவுத்திட்டத்தை  நிறைவு செய்வதற்கு காலதாமதம் எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். (R.A)
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--