2021 மார்ச் 06, சனிக்கிழமை

கொக்காவில் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு

Editorial   / 2017 ஜூலை 15 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

முறிகண்டிக்கும் கொக்காவில் பகுதிக்கும் இடைப்பட்ட தண்டவாளப் பகுதியிலே 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம், இன்று சனிக்கிழமை (15) மீட்கப்பட்டுள்ளது என மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழிலிருந்து கொழும்பு நோக்கி நேற்றிரவு (14) சென்ற ரயிலில் பயணித்த ஆண் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

அவர், குறித்த சடலம் மீட்கப்பட்ட பகுதியிலேயே காணாமல் போயுள்ளாரெனத்  தெரிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் அப்பகுதியில் தேடுதல் மேற்கொண்டபோதே குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர், நேற்றிரவு ரயிலிலிருந்து விழுந்ததாக கூறப்படும் நபராக இருக்கலாம் எனத் தெரிவித்த மாங்குளம் பொலிஸார்,  விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .