2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

'கச்சதீவு ஒப்பந்தத்தில் மாற்றமில்லை'

George   / 2016 ஜூலை 08 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கச்சதீவு ஒப்பந்தத்தில் மாற்றம்  செய்வது சாத்தியமில்லை என பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தேவகோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற பா.ஜ.க மாவட்ட செயற்குழு கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

'தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசிவருகிறது. அதுவரை இந்திய மீனவர்கள் பொறுத்திருக்க வேண்டும்.

மழைக்கால கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் சட்டதிருத்தம் நிறைவேற்றப்படும். அதனால் வரவிருக்கும் பொங்கல் தமிழக மக்களுக்கு இனிப்பான பொங்கலாக இருக்கும்' என தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .