2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

கட்சி மாறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை; ஐ.தே.க. எச்சரிக்கை

Super User   / 2010 மே 16 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து அரசாங்கத் தரப்புக்கு எவரேனும் மாறுமிடத்து அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கட்சி மாறப்போவதில்லை என்று ஐ.தே.க. உறுப்பினர்களால் ஏற்கனவே கைச்சாத்திடப்பட்ட பத்திரங்கள் உள்ளன. அவற்றைக்கொண்டே இந்த சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இருப்பினும் தமது கட்சியைச் சேர்ந்த எவரும் அரசாங்கத் தரப்புடன் இணையப் போவதாக இதுவரையில் அறிவிக்கவில்லை என்று தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்கா, அவ்வாறு செய்வதற்கு எவரேனும் முன்வருவார்களாயின் அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தினூடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ பிரச்சினை மேலும் தொடரும் பட்சத்தில் அரசாங்கத் தரப்புடன் இணைவது குறித்து சிந்திக்கப்படும் என்று ஐ.தே.க.வின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .