Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 நவம்பர் 10 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க பதிவாளர் திணைக்களம் வெளியிட்டுள்ள மூன்றாவது காலாண்டுக்குரிய, குடியுரிமையைத் துறந்தவர்களின் பட்டியலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ பெயர் இடம்பெறவில்லை என, தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியினர், அவரது பெயர் இல்லாத பட்டியலை சமூக ஊடகங்களில் வெளியிட்டு, பிரசாரங்களை முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில், அமைச்சர் ஹரின் பெர்னான்டோவின் கருத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதில் அளித்து பதிவிட்டுள்ளார்.
“ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை தொடர்பான சந்தேகங்களுக்கு அனைவருக்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதரம் உள்ளது. இனி அவர் அமெரிக்க குடிமகன் அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை துறப்பு ஆவணத்தின் பிரதியையும், அமெரிக்க கடவுச்சீட்டின் படத்தையும் வெளியிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷவின் கடவுச்சீட்டின் முதல் பக்கத்தில் இரத்து என ஆங்கிலத்தில் சிவப்பு மையினால் முத்திரை குத்தப்பட்டுள்ளதுடன், இரண்டு இடங்களில் துளையிடப்பட்டுள்ளது. மேலும், படம், மற்றும் விவரங்கள் அடங்கிய பக்கத்திலும், இரண்டு துளைகள் இடப்பட்டுள்ளன.
— Namal Rajapaksa (@RajapaksaNamal) November 9, 2019
1 hours ago
7 hours ago
7 hours ago
20 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
7 hours ago
20 Oct 2025