2021 மே 08, சனிக்கிழமை

கடலில் மூழ்கி இளைஞன் பலி

Kanagaraj   / 2015 நவம்பர் 23 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு ஏறாவூர் -சவுக்கடிக் கடலில் இன்று திங்கட்கிழமை மாலை குளித்துத்துக்கொண்டிருந்த வேளையில் அலையில் சிக்கியதையடுத்து நீரில் மூழ்கி 18 வயதான இளைஞன்  மரணமடைந்துள்ளார். மயக்கமுற்ற நிலையில் மற்றுமொரு இளைஞன், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஏறாவூர்ப் பிரதேசத்தைச் சேர்ந்த சரீப்தீன் முஹமட் அம்ஜத் என்ற இளைஞனே பலியாகியுள்ளார் என ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

கடலில் நான்கு இளைஞர்கள் குளித்துக்கொண்டிருந்தவேளையில் இந்த இருவரும் பாரிய அலையில் சிக்கி அள்ளுண்டு செல்லப்பட்பட்டுள்ளர். அதிலொருவரே பலியாகியுள்ளார். ஏனைய இரண்டு இளைஞர்களும்  நீந்திக்கரைசேர்ந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X