2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

கண்டி மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர் சுதந்திரக்கட்சியில் இணைவு?

Super User   / 2010 மார்ச் 02 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் மர்ஜான் மாஸ்டர் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் இணையவுள்ளார் என தமிழ்மிரர் இணையதளத்துக்கு சற்றுமுன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உயர்மட்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மர்ஜான் மாஸ்டர் எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் போட்டியிடவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கண்டி மாவட்டத்துக்கான வேட்பாளராக ஐக்கிய தேசியக்கட்சியின் கீழ் போட்டியிடுவதற்கு ரவூப் ஹகீம் தனக்கு வாக்குறுதி வழங்கியிருந்தார்.
எனினும் கடைசி நேரத்தில் ரவூப் ஹகீம் தன்னை ஏமாற்றிவிட்டார் என்று மர்ஜான் மாஸ்டர் குற்றம் சுமத்தினார்.

மலையக முஸ்லிம் கவுன்ஸில் மூலம் சுதந்திரக்கட்சியில் இணைந்துகொண்ட மர்ஜான் மாஸ்டர் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு ஆதரவாக செயற்படவுள்ளதாகவும் அப்பேச்சாளர் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.

  Comments - 0

  • Jaufer Wednesday, 03 March 2010 02:58 PM

    What a sad situation of Lanka. All these politicians just change their colors for their own sake. As soon as they did not get what they, suddenly understands that the other party had done lots of services to their community more than he or his party did till yesterday.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .