2025 ஜூலை 12, சனிக்கிழமை

கப்பம் பெற்ற இளைஞனை கைது செய்ய உத்தரவு

Editorial   / 2017 ஜூலை 20 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.பகவான்

இளம் பெண்ணை மிரட்டி இரண்டு இலட்சம் ரூபாய் கப்பமாக பெற்ற இளைஞரை கைது செய்யுமாறு, சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீ நிதி நற்தசேகரன் இன்று (20) உத்தரவிட்டார்.

காதலித்த போது பெற்றுக்கொண்ட புகைப்படங்களை உருமாற்றி ஆபாசப் படங்களாக இணையதளத்தில் வெளியிடப் போவதாகக் கூறி, தன்னிடம் 2 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை பெற்றுக்கொண்டதாக, பெண்ணொருவர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாடு, இன்று (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் குறித்த இளைஞரை கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .