2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

குற்றப்புலனாய்வு திணைக்கள பிரதம அதிகாரி கைது

Super User   / 2010 ஜூன் 27 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதம அதிகாரியும்  மற்றுமொரு நபரும் புத்தளம், முந்தல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இது சம்பந்தமாக டெய்லிமிரர் இணையதளத்திற்கு கருத்துத் தெரிவித்த முந்தல் பொலிஸ், கொலை செய்யப்பட்ட சடலத்தை புத்தளம், முந்தல் பகுதி கடலில் இரண்டு பேர் டவுள் கேப் வாகனத்தில் கொண்டு வந்து  போட்டுள்ளனர். இதனை அவதானித்த அப்பகுதி மக்கள் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119  அறிவித்தனர்.

இதனை தொடர்ந்து அந்த டவுள் கேப் வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற பொலிஸார்,  அவ்வாகனத்தில் இருந்த இருவரையும் கைது செய்தனர். அதில் ஒருவர் குற்றப்புலனாய்வு பிரிவின் பிரதம அதிகாரியான சந்தன டி சில்வாஆவார். மற்றைய நபர் வெள்ளவத்தை பகுதியை சேர்ந்தவராவர்.

கொல்லப்பட்டவர் 40 வயது என நம்பப்படுவதாகவும், அத்தோடு கழுத்தை நெரித்தே கொல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டபோது வாகனத்தில் இருந்து துப்பாக்கி ஒன்றும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கயிறும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0

  • koneswaransaro Monday, 28 June 2010 06:53 AM

    யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .