2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் கைது

Suganthini Ratnam   / 2010 ஜூலை 08 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்தில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள்  மீன்பிடி உபகரணங்களுடன் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று புதன்கிழமை குச்சவெளி பொலிஸாரும், புல்மோட்டை பொலிஸாரும் எடுத்த நடவடிக்கை காரணமாக 3 மீன்படி படகுகளுடன் 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

புல்மோட்டை பொலிஸாரால் ஒரு மீன்பிடிப் படகுடன் மீனவர்கள் இருவரும், குச்சவெளி பொலிஸாரால் இரு மீன்பிடிப் படகுகளுடன் 4 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள்  வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, கடலில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை மாவட்டத்தில் அண்மைக்காலமாக சட்டவிரோத மீன்பிடி இடம்பெற்று வருகின்றது. குச்சவெளி பிரதேச கடற்பகுதியில்  வெடிபொருட்களையும், தடைசெய்யப்பட்ட வலைகளையும் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--