Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 10 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவனொளிபாதமலை, ஒரு மதத்துக்கோ அல்லது ஒரு இனத்துக்கோ மாத்திரம் சொந்தமானது அல்ல என்று, கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சிவனொளிபாத மலையின் அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சிவ ஆலயத்தில், சிவலிங்கம் பிரதிஸ்ட்டை செய்யும் நிகழ்வு, நேற்று (09) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
சிவனொளிபாதமலையாக இந்துக்களும். ஸ்ரீ பாதயாக பௌத்தர்களும். ஆதம் மலையாக முஸ்லிம்களும், எடம்ஸ்பீக்காக கிறிஸ்தவர்களும் பூஜித்துவரம் இந்தப் புண்ணிய தலம், மலையக மக்களால் அதிகம் நேசிக்கப்படும் ஒரு புனித தலமாகக் காணப்படுகின்றது என்றும் அவர் கூறினார்.
இந்த புண்ணிய ஸ்தானத்தில், பௌத்த பெருமானின் சிலைகள் வழிபாடுகள் கூடுதலாக இருந்தாலும் கூட, யாரும் இந்து மதத்தை ஒதுக்கி வைக்கக்கூடாது என்ற எண்ணம், எம் எல்லாருக்கும் இருக்கின்றது என்றும் எமக்குள் ஏற்படும் சில பிரச்சினைகளால், மதத்துக்கு மதம் மோதியும் இனத்துக்கு இனம் மோதியும் தீர்த்துக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார். சிவனொளிபாதமலை என்ற பெயரை, அண்மையில் கௌத்தம ஸ்ரீ பாதம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டதன் காரணமாக, ஏனைய மதத்தர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளும் அச்சமும் எழுந்தன என்று கூறிய அவர், இது, ஒரு இன வாதத்தைத் தூண்டும் செயலாக, எதிர்காலத்தில் அமைந்து விடும் என்ற எண்ணமும், அனைவரின் மத்தியிலும் ஏற்பட்ட நிலையிலேயே, இந்த சிவலிங்கம் பிரதிஸ்ட்டை செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார்.
47 minute ago
59 minute ago
7 hours ago
19 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
59 minute ago
7 hours ago
19 Sep 2025