2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சாலாவ வெடிப்பு விசாரணைகள் இறுதிக் கட்டத்தில்

George   / 2016 ஜூலை 28 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள 3 கட்ட விசாரணைகள் விரைவில்  நிறைவடைந்துவிடும் என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர கூறினார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டபோது ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

இந்த விசாரணைகள் நிறைவடைந்ததும் வெடிப்பு ஏற்பட்டமைக்கான காரணம் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பான விசாரணைகளை இராணுவ விசாரணை பிரிவு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் தற்போது மேற்கொண்டு வருவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

சாலாவ வெடிப்பின் சேதமடைந்த வீடுகளை திருத்தும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு தேவையான பாடசாலை உபகரணங்களை பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் அதேநேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதன் காரணமாக விசாரணை நடவடிக்கைகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .