2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

ஜூன் 8இல் ஜனாதிபதி இந்தியா விஜயம்

Super User   / 2010 மே 16 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜூன் எட்டாம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தெஹ்ரானில் நடைபெற்ற ஜி - 15 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கான சந்திப்பை அடுத்தே வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோரால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது, யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் மேற்படி வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றுள்ளது.

இதன் பின்னரே ஜனாதிபதியின் இந்திய விஜயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஜூன் எட்டாம் திகதியே முதற்தடவையாக ஜனாதிபதி இந்தியாவுக்குப் பயணமாகவுள்ளமை குறிப்பிடத்தக்க்து.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--