2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

டயகம- மொணிங்டன் தோட்டத்தில், நான்கு வீடுகள் சரிந்தன

Editorial   / 2018 செப்டெம்பர் 07 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ், கு.புஷ்பராஜ்


 டயகமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொணிங்டன் தோட்டத்தில், நான்கு வீடுகள் பகுதியளவில் சரிந்ததனால், 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அனர்த்தம் இன்று (07) பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

டயகம பிரதேசத்திலிருந்து, தலவாக்கலை மேல் கொத்மலை நீர்தேக்கத்துக்கு நீரேந்தி செல்லும் ஆக்ரா ஆற்றுக்கு அருகாமையில், 1963 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கட்டப்பட்டுள்ள நான்கு வீடுகளை கொண்ட தொடர்மாடி வீடமைப்பு தொகுதியில் உள்ள 4 வீடுகளே இவ்வாறு சரிந்துள்ளன.


 சம்பவம் இடம்பெருவதற்கு சற்று நேரத்திற்கு முன், பாரிய வெடி சத்தம் ஒன்று கேட்டதாகவும், அதனைத் தொடர்ந்தே குறித்த வீடுகளின் முன் பகுதி சுவர்கள் திடீரென சரிந்து வீழ்ந்ததாகவும் அவ்வீடுகளில் வசிக்கம் மக்கள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் மொணிங்டன் தோட்ட பிள்ளை பராமரிப்பு நிலையத்தில் பாதுகாப்பு கருதி தங்கவைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X