Editorial / 2018 செப்டெம்பர் 08 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனுமதிப்பத்திரமற்ற 03 துப்பாக்கிகள் மற்றும் தோட்டக்களுடன் 43 வயதுடைய சந்தேகநபர் ஒருவர், வென்னப்புவ பொலிஸாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
வென்னப்புவ - வய்க்கால பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுக்கான அனுமதிப்பத்திரம் பாதுகாப்பு அமைச்சினால் சந்தேகநபரின் தந்தைக்கு வழங்கப்பட்டுள்ள போதிலும் அந்த அனுமதிப்பத்திரம் 2003 ஜனவரி 27ஆம் திகதியின் பின்னர் புதுப்பிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி சுடுவதற்கான பயிற்சி பெறுவதற்கு பயன்படுத்தக் கூடியது என்றும் தனது தந்தை முன்னாள் இராணுவ வீரர் என்பதால் அவர் அவற்றை பயன்படுத்தியிருந்ததாகவும் சந்தேகநபர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
2 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago