2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சுவார்த்தையில் வெற்றியில்லை-பஷீர்

Super User   / 2010 ஜூன் 08 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் சற்று முன் தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.

இது சம்பந்தமாக மேலும் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,  தமிழ் மக்களை மீளக்கட்டியொழுப்ப வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளது. அந்த அடிப்படையில் அவர்களுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

எனினும், வெறுமனே தமிழ் மக்களின் பிரச்சினைகளை பேசும் பேச்சுவார்த்தையாக இருந்ததே தவிர, இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தையாக இருக்கவில்லை.

தற்போதைய சுழ்நிலையில், இவ்வாறான பேச்சுவார்த்தைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து பங்குபற்ற வேண்டும். அவ்வாறு இரு கட்சிகளும் இணைந்து பங்குபற்றுவதன் மூலமே வட கிழக்கு மக்களுக்கு தீர்வு கிடைக்கும். அவ்வாறில்லாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமாயின், முன்னைய பேச்சுவார்த்தைகள் போன்றே பயணிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.(R.A)  

  Comments - 0

  • xlntgson Wednesday, 09 June 2010 09:27 PM

    தமிழ்தேசியகூட்டமைப்பு புலி ஆதரவாக இருந்தது என்று கூறும் தேச பற்று இயக்கம் அவர்களோடு பேசவேண்டாம் என்று எதிர்த்தும் இந்தியபிரதமரோடு தீர்வு பற்றி கலந்தாலோசிக்க வேண்டாம் என்று கூறியும்கூட ஜனாதிபதி பேசி இருக்கிறார். இதிலிருந்து ஜனாதிபதி தீவிரவாத அழுத்தங்களுக்கு இடம் கொடுக்காமல் தமிழ்தேசியகூட்டமைப்பை மிதவாத, மக்கள் ஆணை பெற்ற குழுவாக கருதும் வரை பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. முஸ்லிம்காங்கிரஸ் பத்து இடங்களை எதிர்பார்த்து எட்டு இடங்களை பெற்ற கட்சி தமிழ்தேசியகூட்டமைப்புடன் சேர்ந்து செயல்படுமா தொடர்ந்தும்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--