2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

தாய்லாந்தில் புகலிடம் கோரிய இலங்கை தமிழர்கள் நாடு திரும்ப விருப்பம்

Super User   / 2010 ஜூன் 14 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்தில் புகலிடக் கோரிக்கையினை முன்வைத்து காத்திருந்த இலங்கைத் தமிழர்கள் மீண்டும்  நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களில் சிலர் ஏற்கனவே கொழும்பு நோக்கிப் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புகலிடக் கோரிக்கையினை முன்வைத்து தாய்லாந்துக்குச் சென்ற 15பேர் அடங்கிய குழுவினரே
இவ்வாறு நாடு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து தாய்லாந்துக்கு பிரவேசித்த காரணத்தினால் மேற்படி குழுவினர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டணை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--