Kanagaraj / 2016 மார்ச் 30 , மு.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், கி.பகவான்
சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் வீடொன்றில் இருந்து தற்கொலை அங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் புதன்கிழமை (30) மீட்கப்பட்டுள்ளதாகவும், வீட்டில் வசித்தவர் எனக்கூறப்பட்ட இளைஞர் ஒருவர் தப்பித்து ஓடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தற்கொலை அங்கி, 4 கிளைமோர், 2 கிளைமோர் பற்றிரிகள், கைத்துப்பாக்கியின் ரவைகள் 100, சி - 4 வெடிமருந்துகள் 12 கிலோ என்பன மீட்கப்பட்டன.
மேற்படி வீட்டில் ஆயுதங்கள் இருப்பதாக புலனாய்வாளர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வீட்டைச் சுற்றி வளைத்து ஆயுதங்கள் மீட்கப்பட்டன.
வீட்டுக்காரர் முன்னாள் புலி உறுப்பினர் எனச் சந்தேககிப்பதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
40 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago