2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

‘தலையணை’ மாற்றம்

Editorial   / 2017 மே 25 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

“அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றமானது, தலைவலிக்குத் தலையணையை மாற்றியதைப் போன்றதாகும்” என்று, பெவிதி ஹன்ட அமைப்பின் தலைவர் முருத்தொட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

நாரஹேன்பிட்டிய அபயராம விகாரையில் நேற்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,  

“உணவுக்காகவும் மற்றும் ஏதாவது குடிப்பதற்காகவும் ஏதாவது கேட்டுக்கொண்டு, விகாரைகளுக்கு அன்றாடம் வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.   ஒருநேரச் சாப்பாட்டைத் தேடிக்கொள்ள முடியாத பொருளாதார நிலைமையே நாட்டில் இன்றிருக்கிறது. ஆகையால்தால், உதவிகளை கேட்டு, மக்கள் வீதிவீதியாக அலைகின்றனர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X