2021 மார்ச் 01, திங்கட்கிழமை

தோட்டக் கம்பனிகளுக்கு இரு வார காலக்கெடு

Menaka Mookandi   / 2016 மே 30 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் இரண்டு வாரக் காலப்பகுதிக்குள், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க, தோட்டக் கம்பனிகள் இணக்கம் தெரிவிக்காவிட்டால், தொடர் வேலைநிறுத்தப் போராட்டமொன்று முன்னெடுப்பதற்கு, தோட்டத் தொழிலாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

கடந்த வாரங்களில், இப்பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்ற நிலையில், இது தொடர்பில் கண்டறிவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு, இதுவரையில் தீர்வு எட்டப்படாத நிலையிலேயே, தொழிலாளர்கள் மேற்கண்ட காலக்கெடுவினை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .